JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

துணை நடிகரை கொன்ற துணை நடிகை: சென்னையில் 4 பேர் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் துணை நடிகரை கொலை செய்த துணை நடிகை மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை கொரட்டூரில் வசித்து வரும் தேவி என்பவர், நாயகன் படத்தில் துணை நடிகையாக நடித்தவர். சில தொலைக்காட்சித் தொடர்களிலும் தேவி நடித்துள்ளார். இவருக்கும், ரவி என்ற துணை நடிகருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. இதனை தேவியின் கணவர் சங்கர் கண்டித்துள்ளார். இதையடுத்து வடபழனியில் இருந்து கொரட்டூருக்கு தேவியின் குடும்பம் இடம் பெயர்ந்துள்ளது. ஆயினும், ரவி, தேவிக்கு அடிக்கடி தொலைபேசியில் பேசி தொல்லை தந்ததாக கூறப்படுகிறது.

Image result for துணை நடிகர் கொலை துணை நடிகை கைது

இந்நிலையில், தேவியின் தங்கை லட்சுமியை சந்திக்க வேண்டும் என்றும், மறுத்தால் தங்கை மகனை கடத்தப்போவதாகவும் கூறி ரவி மிரட்டியதோடு, கொளத்தூரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கும் சென்றுள்ளார். குடிபோதையில் தகராறு செய்த ரவி, தேவியின் தங்கை லட்சுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால், தேவி, அவரது கணவர் சங்கர், லட்சுமி, அவரது கணவர் சவரியார் ஆகியோர் ரவியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது சுத்தியலால் தேவி தாக்கியதில் ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலை - விளையாட்டு பூங்காவில் நேர்ந்த விபரீதம்

ரவி உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த தேவி உள்ளிட்ட 4 பேரும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். நால்வரையும் கைது செய்த காவல்துறையினர், கொல்லப்பட்ட ரவியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Advertisement:
[X] Close