ஜனவரி 1ஆம் தேதி ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் - தமிழக அரசு

10-Rupees-tourism-around-chennai-on-Janaury1-1


ஜனவரி 1-ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது


Advertisement

நாளை மறுநாள் 2020-ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு தினத்தையொட்டி பலரும் குடும்பத்துடன் சென்னையை சுற்றிப்பார்ப்பார்கள் என்பதால் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளது.


Advertisement

தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை வாலாஜா சாலையில் சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு
வேண்டுமானாலும் இறங்கலாம், ஏறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Advertisement

மேலும் விவரங்களுக்கு,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்
சுற்றுலா வளாகம்
வாலாஜா சாலை சென்னை.

04425333333/25333444/25333850


www.tamilnadutourism.org

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement