கெடு முடிந்தது எனக் கூறி கூவம் கரையோர வீடுகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள்..!

Officers-demolished-houses-near-chennai-Koovam

சென்னை தீவுத்திடல் அருகே கூவம் கரையோரம் வசித்தவர்களின் வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது.


Advertisement

சென்னை தீவுத்திடல் எதிரே கூவம் கரையோரம் அருகே உள்ள எம்எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2092-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் கூலித் தொழிலாளர்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். ஆனால் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெய்த கனமழை அடுத்து வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தி, பெரும்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் கொடுத்து தங்க வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

image


Advertisement

அதன்படி பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, கூவம் கரையோரம் இருப்பவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு செல்லுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதற்காக கெடுவும் விதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதற்கான கெடு முடிவடைந்த போதும் பகுதிவாசிகள் குடிசைகளை காலி செய்யாததால், இன்றைய தினம் மாநகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து வீடுகளை அப்புறப்படுத்தினர்.

ஆனால் வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு செல்ல மாட்டோம் எனவும் பகுதிவாசிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்புடன், அமைதியான முறையில் வீடுகளை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்

அப்போது பேசிய அந்த பகுதிவாசிகள் கூறும்போது-


Advertisement

image

“பல வருடங்களாக இந்த கூவம் கரையோரம் வசித்து வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் படிப்பு போன்றவை அனைத்தும் இந்த பகுதியை சுற்றி இருப்பதால் இந்த பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது இயலாத காரியம். குழந்தைகளுக்கு மே மாதம் வரை பள்ளிகளில் படிப்பதால் அதுவரை மாநகராட்சி சார்பில் காலஅவகாசம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

சென்னை நதிக்கரை மறுசீரமைப்பு அறக்கட்டளை அதிகாரி ஜெயந்த் கூறும்போது,

image

“தீவுத்திடல் அருகே கூவம் கரையோரம் இருப்பவர்களை மறுகுடியமர்வு செய்யும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் செய்து வருகிறோம். ஏற்கெனவே சென்னை மாநகராட்சி முழுவதும் 44 இடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறோம். தீவுத்திடலை பொறுத்தவரை 2092 குடும்பங்களுக்கு பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், பெரும்பாக்கம் பகுதியில் செல்லக்கூடிய அவர்களுக்கு மாதம் 2500 அரசு சார்பில் கொடுக்கப்படுகிறது. 12 மாதங்களுக்கு இந்த தொகை கொடுக்கப்படும். மேலும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகள் போன்ற அனைத்து வசதிகளும் இருப்பதால் பொதுமக்கள் அமைதியான முறையில் மாற்றி இடத்திற்கு கலைந்து செல்ல வேண்டும்

பள்ளிகளில் படிக்கக்கூடிய குழந்தைகள் யார் யார் என கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் பணியைத் தொடங்கி இருக்கிறோம். ஏற்கெனவே படிக்கக்கூடிய பள்ளிகளில் குழந்தைகள் கல்வி தொடர விரும்பினால் பேருந்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்”என தெரிவித்தார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement