JUST IN
  • BREAKING-NEWS ‌ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என நாளை கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‌குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது - நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS ‌கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‌சீனாவில் கொரனோ வைரஸ் பரவி வருவதால் தமிழகம் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை
  • BREAKING-NEWS ‌எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியில் ஒருவர் கைது
[X] Close

சிகரெட் லைட்டரை வைத்து தப்பமுயன்ற கொள்ளையன்; விரட்டிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவல் அதிகாரி எனக்கூறி வியாபாரியிடம் இருந்து வெள்ளிக் கட்டியை பறிக்க முயன்ற கொள்ளையனை, ரயிலை நிறுத்தி அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் விரட்டிப் பிடித்திருக்கிறார்கள்

திருவள்ளூர் மாவட்டம் அகரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். நகைக் கடைகளுக்கு வெள்ளிப் பொருட்களை தயாரித்துக் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். வியாழக்கிழமை மாலை பிராட்வே பகுதிக்குச் சென்ற கார்த்திக், அங்குள்ள கடையில் ‌ஒரு கிலோ எடையுள்ள வெள்ளிக் கட்டிகளை வாங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகேயுள்ள உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்த 2 பேர், தாங்கள் காவல்துறை சிறப்பு அதிகாரிகள் என்றும், பையை சோதனையிட வேண்டுமெனக்கூறி பிடுங்க முயற்சித்திருக்கிறார்கள்.

சந்தேகமடைந்த கார்த்திக் பையை தர மறுத்தப்போது, அவர் மீது தாக்குதல் நடத்திய இருவரும், பையை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். அதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். அருகில் இருந்த ரயில் நிலையத்திற்குள் புகுந்த அவர்கள், ரயில் ஏறி தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. விடாமல் விரட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள், புறப்படத் தயாராக இருந்த ரயிலை தடுத்து நிறுத்தியதோடு, தப்ப முயன்ற ஒரு கொள்ளையனை சுற்றி வளைத்தனர். கையில் துப்பாக்கி போன்ற பொருளை வைத்து சுட்டுவிடுவதாக மிரட்டி போக்கு காட்டிய அவர், இறுதியில் ஆட்டோ ஓட்டுநர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார்.

விசாரணையில் பிடிபட்ட நபர் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பொதுமக்களை மிரட்டுவதற்காக துப்பாக்கி வடிவிலான சிகரெட் லைட்டரை வைத்து ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுரேஷை கைது செய்து வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பியோடிய பாஷா என்பவரைத் தேடி வருகின்றனர்.


“தோனி போன்ற திறமையான வீரரைப் பெறுவது கடினம்” - சவுரவ் கங்குலி  


 

Advertisement:
[X] Close