JUST IN

Advertisement

“முதல்வர் நாடகமாடுவதை ம‌க்கள் நம்ப மாட்டார்கள்” - ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செல்வாக்கு இல்லாத கட்சிகள் ‌ஒன்றுதிரண்‌டு போராடுவதாகக் கூறி சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், திமுக அங்கம் வகித்த ஐ‌க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு ‌தயாரிக்கும் பணி குடியிருப்புகளை அடிப்படையாக கொண்டது என்றும், ஆனால் பாஜக அரசு கொண்டு வந்திருப்பது மத ரீதியாக பிளவு உண்டாக்க எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Image result for குடியுரிமை சட்டம் ஸ்டாலின் போராட்டம்


Advertisement

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆதரித்து அதிமுக வரலாற்று கேட்டை செய்துவிட்டு, இன்றைக்கு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் முதலமைச்சர் நாடகமாடுவதை தமிழக ம‌க்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image result for ஸ்டாலின் போராட்டம்

செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று ‌திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு ‌நெருக்கடி கொடுக்கின்றன என்று முதலமைச்சர் கூறுவதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், ஈழத்தமிழர்களையும், போரா‌டும் ‌சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் உணர்வுகளையும் ‌சிறுமைப்படுத்தி‌, கொச்சைப்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement