சென்னையில் மதுபோதைக்காக இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையின் சைதாப்பேட்டை, கிண்டி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் வாசலில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருடு போவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை காவல்துறையினர், சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகே புருஷோத்தமன் என்பவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் லாரி ஓட்டுநராக இருந்ததும், தற்போது கடந்த ஓராண்டாக வேலைக்குச் செல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. வருமானம் இல்லாததால் மது அருந்தவும் பணம் இல்லை என்பதால் திருட்டில் ஈடுபட்டதாக புருஷோத்தமன் கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவலரை தாக்கி வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம்.. விரட்டிய போலீஸ்..!
திருடிய வாகனங்களை டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரிடம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. பின்னர் 14 இரு சக்கரவாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்