பின்னிப்பிணைந்து நடனமாடிய சாரைப் பாம்புகள் - கண்டுரசித்த மக்கள்

two-snakes-dance-in-perambalur

பெரம்பலூர் அருகே, இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடனமாடியதை, அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமாக கண்டு ரசித்தனர்.


Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் விஸ்தரிப்பு பகுதியில் சுமார் 12 அடி நீளமுள்ள இரண்டு சாரைப் பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து நடமாடின. பெரும்பாலும் நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் மட்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து நடனமாடும்.

image


Advertisement

ஆனால் இரண்டு சாரைப் பாம்புகள் நடனமாடியதை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த நிகழ்வு நீடித்தது. இதையடுத்து 2 பாம்புகளும் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றன. இரண்டு பாம்புகள் 30-நிமிடங்களுக்கு மேல் நடனமாடியதை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமாக கண்டு ரசித்தனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement