‘தளபதி 64’ செட்டில் ரசிகர் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்சேதுபதி - வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

‘தளபதி 64’ படப்பிடிப்புக்கு இடையே தனது ரசிகரின் பிறந்தநாளை கேக் வெட்டி நடிகர் விஜய்சேதுபதி கொண்டாடி உள்ளார்.

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அசுர வேகம் எடுத்துள்ளது. இதுவரை இரு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. சில வாரங்கள் முன்பு சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் நடிகர் சாந்தனுவும் கலந்து கொண்டார். அதற்கான படம் ஒன்று இணையதளத்தில் வெளியானது.


Advertisement

Image result for vijay sethupathi

அதனை அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹிமோகாவில் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்தது. இந்தப் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விஜய் மட்டும் முதலில் பங்கேற்றதாக தகவல்கள் கூறின. அதற்கேற்ப விஜய் பங்கேற்ற சில புகப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக பெரிய சிறைச்சாலை ஒன்று செட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில்தான் விஜய்சேதுபதிக்கும் விஜய்க்குமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.


Advertisement

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி பங்கேற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படப்பிடிப்பின்போது கர்நாடக மாநில ரசிகர் ஒருவர் பிறந்தநாளை கொண்டாட விரும்பி உள்ளார். தனது படப்பிடிப்பின் இடையே ரசிகரின் பிறந்தநாளை கேக் வெட்டி விஜய்சேதுபதி கொண்டாடி உள்ளார். அந்த கேக்கை அவரது ரசிகருக்கு ஊட்டியும் விட்டுள்ளார். அதற்கான வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் விஜய்சேதுபதியின் எளிமையை வியந்து பாராட்டி வருகின்றனர்.

Image result for vijay sethupathi

இப்படத்தில்,மிக முக்கிய வேடத்தில் மாளவிகா மோகன் நடித்து வருகிறார். இதில் கல்விமுறைக்குள் நடக்கும் ஊழலை எதிர்க்கும் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், ஸ்ரீநாத் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இதனை தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement