நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 467 ரன்களுக்கு ஆல்அவுட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 467 ரன்கள் குவித்துள்ளது.


Advertisement

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் 0 (1) என ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.

image


Advertisement

மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் 41 (64) ரன்களில் வெளியேறினார். 155.1 ஓவர்களுக்கு 467 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ட்ரவிஸ் ஹெட் 114 (234), ஸ்டீவ் ஸ்மித் 85 (242), டிம் பெயின் 79 (138) மற்றும் மார்னஸ் 63 (149) ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் நெயில் வாக்னர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். தற்போது நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.

சென்னையில் துணை நடிகையின் கணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை..!

loading...

Advertisement

Advertisement

Advertisement