நம்மை ஏன் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று என் மகள் கேட்கிறாள் - நடிகர் அக்‌ஷய்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது 7 வயது மகள் நிடாராவுக்கு தான் பெரிய நடிகர் என்றெல்லாம் தெரியாது என பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement

பாலிவுட் திரையுலகில் முக்கியமான நடிகர் அக்‌ஷய்குமார். ஹவுஸ்புல்-4,மிஷன் உள்ளிட்ட 3 திரைப்படங்களை இந்த வருடத்தில் இதுவரை கொடுத்துள்ள அக்‌ஷய்குமார், அடுத்து குட் நிவ்ஸ் திரைப்படத்துக்காக காத்திருக்கிறார். விரைவில் குட் நிவ்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அக்‌ஷய் பேட்டியளித்துள்ளார். அதில் தன் மகன், மற்றும் மகள் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். குறிப்பாக தன் மகளுக்கு நான் ஒரு நடிகர் என்றெல்லாம் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

பேட்டியில் இது குறித்து பேசிய அக்‌ஷய், ''எனது 7வயது மகள் நிடாராவுக்கு நான் பெரிய நடிகர் என்றெல்லாம் தெரியாது. அதனை புரிந்துகொள்ளும் வயது அவளுக்கு இல்லை. அவள் கார்டூன்களை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். நம்மை ஏன் இவர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று கேட்கிறாள். புகைப்படம் எடுப்பவர்களுக்கு குடும்பம் இருக்கிறது. நம்மை புகைப்படம் எடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் விளக்கம் அளிக்கிறேன். அதனை அவள் புரிந்துகொள்கிறாள்.

 


Advertisement

என் மகன் ஆரவ் என் படங்களை பார்க்கிறான். ஒரு வார்த்தையில் என் படம் குறித்து அவன் கருத்து சொல்லிவிட்டு போய்விடுவான். மிஷன் மங்கல் திரைப்படத்தை பார்த்துவிட்டு '' அப்பா.. எனக்கு படம் பிடித்திருந்தது'' என்று சொன்னான். ஹவுஸ்புல்-4 திரைப்படத்தை பார்த்துவிட்டு ‘பரவாயில்லை’ என்று சொன்னான்'' என தெரிவித்துள்ளார்.


முடிந்தது ஹைதராபாத்; அடுத்து சென்னை - தீயாய் வேலை செய்யும் ‘வலிமை’ படக்குழு!  


 

loading...

Advertisement

Advertisement

Advertisement