முடிந்தது ஹைதராபாத்; அடுத்து சென்னை - தீயாய் வேலை செய்யும் ‘வலிமை’ படக்குழு!

First-schedule-of-Ajith-s--Valimai--wrapped-up

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதே கூட்டணியுடன் அஜித் மீண்டும் இணைந்தார். வலிமை எனப்பெயரிடப்பட்ட திரைப்படத்தை தொடங்கினார் இயக்குநர் வினோத். இந்த திரைப்படத்தில் அஜித் இருவேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே வித்தியாசமான மீசை கெட்டப்புடன் இருந்த அஜித்தின் புகைப்படம் இணையத்தில் பரவியது.


Advertisement

 


Advertisement

அதற்கு பின் வலிமை படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்நிலையில் ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குப்பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்ரீகோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேரத்தை வீணாக்காமல் வேகமாக படவேலைகளை முடிக்க வேண்டும் என்பதில் வலிமை படக்குழு தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

படத்தில் கதாநாயகி யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் யமி கெளதம் அல்லது ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


‘உங்கள் புகைப்படம் மீமாக மாறுகிறது’ - கிண்டலுக்கு பதிலளித்த மோடி..!  


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement