‘கீர்த்திக்கு கேக் ஊட்டிய ரஜினி’ - தேசிய விருதுக்காக தலைவர்168 படக்குழு சிறப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தலைவர்168 படக்குழு சார்பில் கேக் வெட்டி சிறப்பு செய்யப்பட்டது.


Advertisement

தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் நடித்ததற்காக இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.


Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்துடன் பெயரிடப்படாத படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விருதுப் பெற்ற கையோடு படப்பிடிப்பு தளத்திற்கு கீர்த்தி சுரேஷ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

தலைவர்168 படக்குழு சார்பில் கீர்த்திக்கு கேக் வெட்டி சிறப்பிக்கப்பட்டது. இதில், ரஜினி காந்த், இயக்குநர் சிறுத்தை சிவா, நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி கேக் ஊட்டுவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

அத்துடன், அவருக்கு பூங்கொத்து கொடுத்து ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.