பரங்கிமலை! சிலருக்கும் தெரிந்த இடம். பலருக்கு தெரியாத இடம். இந்தியாவின் மிகப் பழமையான சரித்திரச் சின்னம் இது. இந்திய நிலவியல் வரை படத்தை தயாரித்த ஆங்கிலேயர்கள் இந்த மலையிலிருந்துதான் இமய மலையை அளவு எடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது. கடல் மட்டத்தில் இலிருந்து 300 அடி உயரமுள்ள இந்த மலையில்தான் செயிண்ட் தாமஸ் ஜெபம் செய்தார். அவர் தன் திருக்கரத்தால் செதுக்கிய கற்சிலுவை ஒன்று இங்கு உயிர்ப்புடன் இன்றும் புழகத்தில் உள்ளது.
தாமஸ் இங்கே வரும்போது புனித அன்னை மரியாவின் ஓவியத்தை கையில் கொண்டு வந்தார். இந்த ஓவியம் புனித லூக்காவினால் வரையப்பட்டது. இதை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள் கி.பி. 50ஐ சேர்ந்த மிகப் பழமையான ஓவியம் என சான்றளித்திருக்கிறார்கள். 1559ல் சந்திரகிரி மன்னன் இந்தப் புனித ஓவியத்தை தன் அரண்மனைக்கு எடுத்து வர சொன்னார். அதனை அவர் வணங்கிய பிறகு பல்லக்கில் வைத்து பவனிவர செய்து திரும்ப திருத் தலத்திற்கே அனுப்பிவிட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது.
ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் கேரளா வழியே சாந்தோம் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை சின்னமலைக்க இடம்பெயர்ந்து இறுதியாக இந்த மலைக்கு வந்து சேர்ந்ததாக கிறிஸ்துவ பெருமக்கள் நம்புகிறார்கள். அங்கே அவர் ஏசுவை ஜெபித்துக் கொண்டிருந்த தருணத்தில் சிலர் பகைவர்களால் கொலை செய்தப்பட்டதாகவும் நம்பப் படுகிறது.
அக்கொலைக்கு சாட்சியமாக அவர் வடித்த கற்சிலுவையில் சிதறிக் கிடந்த இரத்த திவலைகளை கண்டதாகவும் அதை கொண்டே பிறகு இங்கே தேவாலயம் கட்டியதாகவும் கிறிஸ்துவ மறை சொல்கிறது. கி.பி. 72ல் மயில்வேட்டைக்கு வந்த வேடன் ஒருவன் தன் ஈட்டியைக் கொண்டு தாமஸை சாய்த்தான் என தன் பயணக் குறிப்பில் மார்கோபோலோ எழுதி இருக்கிறார்.
வாஸ்கோ டா காமா கடல்வழியே இந்தியா வந்த பிறகு போர்ச்சுக்கீசியர்களின் புகழ் இந்திய நிலத்தில் படியத் தொடங்கியது. அதன்பின் சுமார் கி.பி. 1523ல் இந்தப் பரங்கிமலை தேவாலயம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கே செயிண்ட் தாமஸின் இரத்த வியர்வைத் துளிகள் கி.பி. 1704ல் இறுதியாக தென்பட்டதாக புராணம் சொல்கிறது.
ஆக, இந்தத் தேவாலயம் இந்தியாவிலேயே மிகப் பழமையானது. இங்கு இரண்டாம் போப் ஜான் பால் 1986ல் வருகை தந்து சிறப்பித்திருக்கிறார். 2011ல் இதை தேசிய திருத்தலமாக நம் இந்திய அரசு அறிவித்திருக்கிறது. 1955 டிசம்பர் 18ல் டெல்லியில் தோமையர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், “கிறிஸ்துவ நாடுகளாக இருக்கும் பல தேசங்கள் தோன்றுவதற்கு முன்பே இந்தியக் கடற்கரைக்கு வந்தவர். இவரிடமிருந்து கிறிஸ்துவ பாரம்பரியத்தை தொடங்கும் இந்திய கிறிஸ்துவர்கள் ஐரோப்பிய கிறிஸ்துவர்களைவிட பழமையானவர்கள்” என புகழாராம் செய்தார்.
சென்னையை இணைக்கும் அண்ணா சாலைக்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர், மவுண்ட் ரோடு. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிருந்து பரங்கிமலைக்கு செல்வதற்காக போட்ட சாலையை ஆங்கிலேயர்கள் மவுண்ட் ரோடு என்றார்கள். அன்றைக்கு இது வெறும் ஒருவண்டிப் பாதை. இன்று அகன்ற நெடுஞ்சாலை. இந்த மலையிலுள்ள ஏசுவை ஜெபிப்பதற்காகவே அன்று வாழ்ந்த ஆர்மீனிய செல்வந்தர்கள் இக்கோயிலுக்கு நிறைய நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். அப்படி 1726ல் தன் சொந்த செலவில் அடையாற்றில் பாலம் கட்டிக் கொடுத்தார் மெட்ரூஸ் உல்கான். அந்தப் பாலம் ‘மர்மலாங் பாலம்’. கூடவே இவர் இம்மலைக்கு செல்ல 135 படிக்கட்டுகளை போட்டும் கொடுத்தார்.
இந்தத் தேவாலயத்தில் செயிண்ட் தாமஸின் கைவிரல் எலும்புத் துண்டு திருப்பண்டாமாக வைத்து பூஜிக்கப்படுகிறது. கூடவே 124 புனிதர்களின் புனித திருப்பண்டங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. ஏசுவின் முதல் சீடர் செயிண்ட் பீட்டர் (இராயப்பர்) தொடங்கி 14 மிகப் பழமையான வசீகரமான படங்களை வரிசையாக வைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய இப்படங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
ஏசு லாசரசை காணும் பொருட்டு ஜூதேயாவுக்கு மீண்டும் செல்லும் நோக்கத்தை அறிவித்த போது தாமஸ்தான் மற்ற சீடர்களிடம் “நாமும் கூடவே செல்வோம். ஒருவேளை நாம் அனைவரும் கொல்லப்படலாம்” என தைரிய வார்த்தைகளை தந்தவர். ஆகவே இவருக்கு செல்வாக்குக் கூடி நிற்பதாக கிறிஸ்துவ பெருமக்கள் மகிமைக் கொள்கின்றனர்.
சுருக்கமாக சொன்னால் விவிலிய வசனங்கள்படி தாமஸ் கொஞ்சம் யதார்த்தவாதி. எதையும் ஆராய்ந்து, அறிந்து தெரிந்து கொண்ட பிறகே ஏற்றுக் கொள்ளும் அறிவுப்பூர்வமானவர் என விவிலிய குறிப்புக்கள் சொல்கின்றன. இந்தத் தேவாலயத்தின் சிறப்புகள் குறித்து பங்கு தந்தை ஃபாதர் கிறிஸ்து ராஜூடன் கேட்டோம்.
“புனித தோமையார் 52 வது நூற்றாண்டில் இந்த மலைக்கு வந்தார். முன்பு லிட்டில் மவுண்ட்டில் தன் வாழ்நாளை சிறிது காலம் கழித்தார். அன்றாடம் அங்கிருந்து இத்திருமலைக்கு அவர் ஜெபிக்க வருவது வழக்கம். அப்படி ஒருநாள் ஜெபத்தில் இருந்தவரை எதிரிகள் கொன்றதாக கூறுப்படுகிறது. அதன் 12 நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தத் தேவாலயத்தை கட்டினார்கள். இதற்கு ‘கர்த்தரை எதிர்நோக்கிய ஆலயம்’என பெயரிட்டனர்.
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் 25 ஆம் நாள் முன்பாக 18 ஆம் நாள் இவ்வாலயத்தின் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஏசுவின் பிறப்புக்காக கருத்தாங்கிய அன்னையின் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பிரதி மாதம் 18 ஆம் தேதியும் சிறப்பு வழிப்பாடு உண்டு” என்கிறார்
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு