ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’ படத்தில் குஷ்பு வில்லியாக வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் ‘தர்பார்’ இன்னும் திரைக்கு வரவில்லை. அதற்கான இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி தனது பழைய வாழ்க்கை குறித்து பலரும் அறியாத பல தகவல்களை முதன்முறையாக பகிர்ந்து கொண்டார். தான் தமிழ் மண்ணில் கால் வைத்தது எப்படி என்ற கதையை உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருக்கும் ‘தர்பார்’ திரைக்கு வருவதற்கு முன்பே, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அடுத்தப் படம் வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கான பூஜை அவரது பிறந்தநாளை ஒட்டி போடப்பட்டது. இதற்கு இன்னும் தலைப்பிடவில்லை என்பதால் ‘தலைவர் 168’ எனக் குறிப்பிட்டே செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு இருவரும் ரஜினிகாந்த் உடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
"கிரிக்கெட் உலகின் ஒரே கேப்டன் தோனி"- அமைச்சர் வேலுமணி ட்வீட்
இந்நிலையில், சமூக ஊடகங்களில் இந்தப் படத்தில் குஷ்பு, வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. பொதுவாக ரஜினி படங்களில் பெண் வில்லி பாத்திரத்திற்கு அவரது ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பு உண்டு. ஆகவே குஷ்புவின் பாத்திரம் இந்தப் படத்திற்குப் பலம் சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது.
அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்குப் பின் ‘தலைவர் 168’ படத்தை சிவா இயக்கி வருகிறார். மேலும் முதன்முறையாக இதில் ரஜினி உடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி ஒன்று ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலும் சிட்டியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை