மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக மாநில ஆட்சிகளை பாரதிய ஜனதா கட்சி இழந்துள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.
2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்திஷ்கர், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதா இருந்தது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலான மாநிலங்களில் தனியாகவோ, கூட்டணியிலோ பாஜக ஆட்சியில் இருந்தது.
அதாவது, 2017 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த பரப்பில் 71 சதவிகித பரப்பளவில் மாநில ஆட்சியில் பாரதிய ஜனதா இருந்தது. ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஷ்கரில் ஆட்சியை இழந்த அக்கட்சி, மகாராஷ்டிராவிலும் ஆட்சியை இழந்தது. இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சியை இழந்துள்ளது. ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணியை இழந்தது. மாறாக, கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி தக்கவைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த பரப்பில் பாஜக வசமுள்ள மாநில ஆட்சிகளின் பங்கு 34 சதவிகிதமாக சரிந்துள்ளது. இதனால், இந்திய வரைபடத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களும் பரப்பளவும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தாலும் மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு சரிந்து வருவதே வரைபடம் கூறும் தகவலாக இருக்கிறது
Loading More post
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்