ஜார்க்கண்ட்டில் பாஜக தோல்வி முதல் இந்திய அணியில் மீண்டும் இணைந்த பும்ரா வரை ! #TopNews

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தியது காங்கிரஸ் கூட்டணி. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் முதல்வராகிறார்.


Advertisement

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா. சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பேரணி.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பரப்புரை தீவிரம். அரசியல் கட்சியினர்,‌‌‌ சுயேச்சைகள் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு.


Advertisement

Image result for voter list

தமிழகத்தில் 6 கோடியை தாண்டியது வாக்காளர்கள் எண்ணிக்கை. வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு‌‌ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல். சூறைக்காற்று வீசும் என்பதால் குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.


Advertisement

இலங்கை மற்றும்‌ ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு. காயத்திலிருந்து மீண்ட ஜஸ்ப்ரீத் பும்ரா, தவானுக்கு அணியில் இடம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement