[X] Close >

“ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும்” - பிரதமர் மோடி

We-will-continue-serving-to-jarkand-says-PM-modi

5 ஆண்டுகள் ஜார்க்கண்ட் மாநில மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு மனமார்ந்த நன்றி என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 65 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், அவை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவித்திருந்தன.


Advertisement

 

அதன்படியே, வாக்கு எண்ணிக்கையில் பாஜகவிற்கு பின்னடைவே ஏற்பட்டது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையான நிலையில் காங்கிரஸ் கூட்டணி 41க்கும் அதிகமான இடங்களை பிடித்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ட்வீட் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, 5 ஆண்டுகள் ஜார்க்கண்ட் மாநில மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு மனமார்ந்த நன்றி. ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும் என குறிப்பிட்டுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


Advertisement

 

மேலும், ஜார்க்கண்ட் மாநில மக்களுக்காக பாஜக தொடர்ந்து செயல்படும் எனவும், இத்தனை ஆண்டுகள் ஜார்க்கண்ட் மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close