குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரில் இருந்து தொடங்கியுள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக தலைமையில் இன்று நடைபெறும் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் பேரணிக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி பேரணி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கியுள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், காதர் மொய்தீன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ப.சிதம்பரம், வீரமணி, கனிமொழி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். பல்வெறு முழக்கங்களுடன் பேரணி நடைபெற்று வருகிறது.
அங்கு சுமார் 5000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியை முன்னிட்டு எழும்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆதித்தனார் சாலையில் ஒரு வழிப்பாதை மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’