[X] Close >

போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவருக்கு அறுவை சிகிச்சை...!

Jamia-Millia-Islamia-student-undergoes-fracture-surgery

டெல்லியில் போலீசாரால் தாக்கப்பட்ட ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டு வன்முறை வெடித்தது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். கல்லூரிக்குள் நுழைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். நூலகத்தில் நுழைந்த போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை தாக்கியதாக பல்கலைக்கழகம் குற்றம் சாட்டியது. இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

ஜாமியா நகரைச் சேர்ந்த முஜீபர் ரஹ்மான் என்பவரது மகன் சயான் முஜீப்பும் ஜாமியா பல்கலை.யில் மூன்றாம் ஆண்டு பிபிஏ படித்துவந்தார். அவரும் போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் சயானின் இரண்டு கால் எழும்புகளும் முறிந்தது.


Advertisement

இதையடுத்து ஒரு வாரத்திற்கு பின்னர், தற்போது சயானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினரால் அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியவில்லை. இருப்பினும், ஜாமியா நிர்வாகம் சயான் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதிப்படுத்தியது.

image

இதுகுறித்து சயானின் தந்தை முஜீபர் ரஹ்மான் கூறுகையில், “நூலகம்தான் சயானின் இரண்டாவது வீடு. மற்ற மாணவர்கள் சயானின் அழுகையைக் கேட்டு இடிபாடுகளுக்கு வெளியே அழைத்துச் சென்றனர். அந்த நிலைமையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆனது. அந்நேரத்தில் என் மகனுக்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


Advertisement

முஜீப் முதலில் குடும்ப மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரை நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தோம். மருத்துவமனையின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டதால் முஜீப்புடன் மருத்துவமனையை அடைவது கூட கடினமாக இருந்தது.” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close