TopNews | CAA எதிர்ப்பு போராட்டங்கள் முதல் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அமைச்சர்களின் கடந்த ஆறு மாத செயல்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு. வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறைகளில் முக்கிய கவனம்.


Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; உத்தரப் பிரதேசத்தில் 16 பேர் உயிரிழப்பு. டெல்லி, பீகார், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடரும் போராட்டங்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மதுரையில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டம். சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றவர்கள் கைது.


Advertisement

தமிழர்கள் முன்னேறுவதை பிடிக்காத எதிரிகள் அதிகமாகிவிட்டனர். சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பரப்புரை செய்ய பாஜக முடிவு. அரசின் சட்டத்தை எதிர்த்து காந்தி நினைவிடத்தில் அமைதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலுக்காக பொது இடங்களில் விளம்பரம் செய்யக் கூடாது. உரிமையாளரின் ஒப்புதல் பெற்றிருந்தாலும் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

திமுக நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது. சிகிச்சைக்காக கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளிநாடு சென்றதால் நிர்வாகிகள் அறிவிப்பு.

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிக்கை. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்திய அணி? மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று பிற்பகல் கட்டாக்கில் நடைபெறுகிறது.

loading...
Related Tags : indiamoditamilnadupalanisamycricketCAACAA protestHeadlines

Advertisement

Advertisement

Advertisement