குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 32 பள்ளிவாசல்களை சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சஸ்லின் ஜமாத்துடன் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கைகளில் கருப்பு பட்டை அணிந்து குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அனைத்து ஜாமாத் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு குடியுரிமைதிருத்தச் சட்டத்தை திரும்பபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேற்கொண்டு சமூக நீதி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்த காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.
மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமைதிருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தினர். இதனையடுத்து கரூர் நகரில் உள்ள 14 பள்ளி வாசல்களில் உள்ள ஜமாத்துகள் சார்பில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரித்த அதிமுக எம்பிக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கேலும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் மேலப்பாளையம் பகுதி முழுவதும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டன.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த், திராவிடர் கழகத்தினர் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’