JUST IN

ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி புதுச்சேரியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போலீசார் மற்றும் தாசில்தாரை விடுதி உரிமையாளர் இரும்பு பைப்பை கொண்டு தாக்க முயன்ற சம்பவத்திற்கான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க இருக்கிறார். அவரது வருகையையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, பொதுப்பணி, நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதியின் வாசலில் இருந்த விளம்பர பதாகைகளை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். இதற்கு ஓட்டல் உரிமையாளர் ராஜ்குமார் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் திடீரென அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ‘அடித்து கொலை செய்துவிடுவேன்’ எனக் கூறியபடி தாசில்தார் மற்றும் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக போலீசார், அவரைச் சுற்றி வளைத்து பிடித்து, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், அந்த மாதுபான விடுதிக்கு சோதனைக்கு சென்ற கலால் அதிகாரிகளை தாக்கி, அவர்கள் மீது நாய்களை ஏவியவர் இந்த ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement: