“மக்களின் குரலை ஒடுக்காமல், செவி சாயுங்கள்”- மத்திய அரசுக்கு சோனியா காந்தி கண்டனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் ஒருதலைபட்சமானது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


Advertisement

குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் போராட்டங்கள் குறித்து சோனியா காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடும் ஏழை மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடும் மக்களையும், மாணவர்களையும் பாஜக அரசு ஒடுக்க நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.

Image


Advertisement

அத்துடன் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் ஒருதலைபட்சமானது என குறிப்பிட்டுள்ளார். அரசின் கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமை இருக்கிறது எனக் கூறியுள்ள சோனியா காந்தி, மக்களின் குரலை அரசு ஒடுக்க நினைக்காமல், அவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement