அமெரிக்க ஸ்பெல்லிங் போட்டியில் தொடர்ந்து கலக்கும் இந்திய குழந்தைகள்

அமெரிக்க ஸ்பெல்லிங் போட்டியில் தொடர்ந்து கலக்கும் இந்திய குழந்தைகள்
அமெரிக்க ஸ்பெல்லிங் போட்டியில் தொடர்ந்து கலக்கும் இந்திய குழந்தைகள்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய அளவிலான ஸ்பெல்லிங் போட்டியில் வழக்கம் போல இந்தாண்டும் இந்திய குழந்தையே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் US Scripps National Spelling Bee என்ற ஸ்பெல்லிங் போட்டிகள் 6 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தப்படும். இந்த போட்டியில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இருந்தும் உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 90வது ஆண்டு ஸ்பெல்லிங் போட்டியில் 12 வயது இந்திய சிறுமி அனன்யா வினய் என்பவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அனன்யாவுக்கு 40 ஆயிரம் டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற அனன்யா, 'தனது கனவு நனவாகிவிட்டதாகவும், தான் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இரண்டாவது இடம்பெற்றவரும் ஒரு இந்திய சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹன் ராஜீவ் என்ற இந்த இந்திய வம்சாவளி சிறுவர் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் ஸ்பெல் செய்வதில் கோட்டைவிட்டதால் முதலிடத்தை தவறவிட்டார். மேலும், அமெரிக்காவின் ஸ்பெல்லிங் போட்டியில் தொடர்ச்சியாக 13ஆண்டுகளாக இந்திய சிறுவர், சிறுமிகள் தான் முதலிடத்தை பெற்று வருகின்றனர். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட அமெரிக்க சிறுவர், சிறுமிகளை இந்திய மொழிகளை தாய்மொழியாக கொண்ட குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் தோற்கடித்து நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றனர். marocain என்ற வார்த்தைக்கு சரியாக ஸ்பெல்லிங் கூறி சிறுமி அனன்யா வெற்றி பரிசை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com