தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாகிஸ்தான முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் பேசும் முஷாரப், தனக்கு ஆதரவளித்ததற்காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற விசாரணையின்போது தமது வழக்கறிஞருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் திரும்புவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. தனது ஆட்சிக் காலத்தின்போது அவசர நிலையைப் பிறப்பித்ததற்காக முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. உடல் நலக் குறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் முஷாரப் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்