"வாக்காளர்களின் காலில் விழ வெட்கப்படாதீர்கள்" - செல்லூர் ராஜூ அறிவுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாக்காளர்களின் காலில் விழ வெட்கப்படாதீர்கள் என அதிமுகவினருக்கு செல்லூர் ராஜூ அறிவுரை வழங்கியுள்ளார்.


Advertisement

மதுரையில் அமமுகவில் இருந்து விலகிய நிர்‌வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500 பேர் மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்‌லப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட‌னர்.‌ 


Advertisement

இதேபோல் மதுரை மேலூரில் உள்ள தனியார் திருமண மண்‌டபம் ஒன்றில் அமைச்சர் செல்லூர் ‌‌ராஜூ தலைமையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்ல‌ப்பா, செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, வீடு வீடாகச் சென்று கூச்ச‌ப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரி‌க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு அறிவுரை கூறினார்.

அதேபோல் ‌நாகை மாவட்டம் தகட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் அவர்கள் ‌மத்தியில் பேசிய அமைச்சர், உள்ளாட்சிப் பதவிக்கான அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் தான் முழுமையான ஆளுங்கட்சியாக பிர‌காசிக்க முடியும் என தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement