ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் குல்தீப் - வெற்றியை நோக்கி இந்திய அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.


Advertisement

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 159, கே.எல்.ராகுல் 102 ரன்கள் குவித்தனர். அதேபோல், ஸ்ரேயாஸ் 52, ரிஷப் பண்ட் 39 ரன்கள் விளாசினர்.


Advertisement

இதனையடுத்து, 388 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லெவிஸ், சாய் ஹோப் நல்ல தொடக்கம் அளித்தனர். லெவிஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெட்மயர் 4 ரன்னில் ரன் அவுட் ஆனார். அதேபோல், சாஸ் 4 ரன்னில் நடையை கட்டினார். 86 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்ந்ததால் எளிதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பூரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டினார். சிக்ஸர்களாக பறக்கவிட்டார். அதனால், ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. வெற்றிக்கான வாய்ப்பு உருவானதாக பார்க்கப்பட்டது. 

அந்த நேரத்தில்தான் 47 பந்துகளில் 75 ரன்கள் விளாசிய நிலையில் பூரான், ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு தொடங்கியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பொல்லார்டு தான் சந்தித்த முதல் பந்திலே ஷமியிடம் வீழ்ந்தார். அதன்பின்னர், நீண்ட நேரம் தாக்குப்பிடித்த சாய் ஹோப்பும் 78 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலே ஹோல்டரும் 11 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜோசப்பையும் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க செய்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் குல்தீப் யாதவ். 


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி 38 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. மீதமுள்ள 12 ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டியுள்ளது. இரண்டு விக்கெட் மட்டுமே மீதமுள்ள இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவின் இரண்டாவது ஹாட்ரிக். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஹாட்ரிக் வீழ்த்தி இலங்கை வீரர் மலிங்கா முதலிடத்தில் உள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement