JUST IN

Advertisement

சதம் விளாசிய ரோகித், ராகுல்...! - இந்திய அணி அதிரடி தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் சதமடித்தனர். 


Advertisement

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து விசாகப்பட்டினத்தில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. 


Advertisement

கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி களம் கண்டு வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் சார்பில் ஆட்டத்தை தொடர்ந்த ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். குறிப்பாக கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி முதலில் அரை சதம் அடித்தார். 

இதைத்தொடர்ந்து ராகுலுக்கு போட்டியாக அதிரடி காட்டிய ரோஹித் சர்மா, தனது 28-வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்தார். 104 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 3 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உள்பட 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து உள்ளே வந்த கேப்டன் கோலி, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சற்று முன்பு வரை இந்திய அணி 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement