மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடக்கோரி காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், இஸ்லாமிய அமைப்புகள் என மொத்தம் 59 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விரிவான விளக்கங்களை அளியுங்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்த விரிவான அறிக்கையை ஜனவரி 22-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த விசாரணையை முழுமையாக முடிக்கும் வரை இந்த சட்டத்தை வைத்து மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்