Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த இந்தியர்களுக்கும் பாதிப்பில்லை: முதல்வர் பழனிசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த இந்தியர்களுக்கும் பாதிப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தெளிவுபடுத்தி விட்டனர். இந்த சட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் வாழ்கின்ற எந்த இந்தியர்களுக்கும் பாதிப்பு இல்லை. அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி.. பாதிப்பில்லை.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அப்போதே ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். நான் பிரதமரை சந்தித்தபோதும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு அதிமுக துரோகம் செய்து விட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய். இலங்கை தமிழர்களுக்காக நன்மை செய்வது போல நாடகமாடும் கட்சி திமுக. கருணாநிதி சொன்ன வார்த்தையை நம்பி வெளியே வந்த இலங்கை தமிழர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.


Advertisement

மத்திய ஆட்சியில் திமுக இருக்கும்போது ஏன் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தரவில்லை. அப்போது இலங்கை தமிழக மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை. அவர்களை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் கருணாநிதியும், ஸ்டாலினும்.

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என எம்பிக்கள் தெளிவாக கூறிவிட்டனர். தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இலங்கை தமிழர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. மாதம்தோறும் 10 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.  


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement