‘பேட்ட’ ரஜினிகாந்த் கெட்அப்பில் நடிகர் தனுஷ் - கசிந்தது ‘டி40’ வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பேட்ட’. இதில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அந்தப் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றது. இதன் பின் கார்த்திக் சுப்புராஜ் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆகவே இதனை ‘டி40’ என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன. மாமனார் ரஜினியை இயக்கிய கையோடு அவரது மருமகன் தனுஷை இவர் இயக்க தொடங்கி உள்ளது பெரும் வாய்ப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ‘டி40’ படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்பு முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்தப் புகைப்படம் வெளியாகி உள்ளது.  மதுரையில் எடுக்கப்பட்டு  வரும் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பில்தான் ‘பேட்ட’ ரஜினி கெட் அப்பில் தனுஷ் உள்ளார்.  இதற்கான புகைப்படம்தான் இப்போது வெளியாகி உள்ளது.  அதே முறுக்கு மீசையுடன் அச்சு அசல் ரஜினியை எடுத்து காட்டும்படி தனுஷ் உள்ளதால் அந்தப் புகைப்படம் பெரிய பேசுப் பொருளாக மாறியுள்ளது.


Advertisement

இந்தப் புகைப்படம் தனுஷின் ப்ளாஷ்பேக் காட்சியில் இடம்பெறும் தோற்றமாக இருக்கலாம் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இதனை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது.

 இதில் மலையாள பட உலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான ஐஸ்வர்யா லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், கலையரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்க உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் தனுஷ் நடித்துள்ள பாத்திரத்திற்கு 'சுருளி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


Advertisement

இதனிடையே, தனுஷ் பங்குபெற்றும் பாடல் காட்சி ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் ‘பேட்ட’ கெட் அப்பில் தனுஷ் தென்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement