JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து முடிவெடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நிதித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் மற்றும் உயர்க்கல்வித்துறை செயலாளரும் இடம்பெறுவர் என தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமெனில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகள் பாதிக்கப்படாது என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

அப்படி மத்திய அரசு உறுதி அளிக்கும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா என்பது குறித்து இக்குழு ஆய்வு செய்து முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

Advertisement: