ஃபார்ச்சூன் பட்டியல்: ரிலையன்ஸ் முதலிடம்

ஃபார்ச்சூன் பட்டியல்: ரிலையன்ஸ் முதலிடம்
ஃபார்ச்சூன் பட்டியல்: ரிலையன்ஸ் முதலிடம்

நடப்பாண்டின் முதல் 500 பெரிய இந்திய நிறுவனங்களின் பட்டியலை சர்வதேச பொருளாதார இதழான ஃபார்சூன் வெளியிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயிலை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடம்பிடித்துள்ளது.

அதன்படி, 5 லட்சத்து 80 ஆயிரத்து 553 கோடி வருவாயுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 5 லட்சத்து 35 ஆயிரத்து 793 கோடி ரூபாய் வருவாயுடன் இரண்டாவது இடத்திலும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 57 கோடி ரூபாய் வருவாயுடன் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

3 லட்சத்து 30 ஆயிரத்து 687 கோடி ரூபாய் வருவாயுடன் பாரத ஸ்டேட் வங்கி 4ஆவது இடத்தையும், 3 லட்சத்து 3 ஆயிரத்து 227 கோடி ரூபாய் வருவாயுடன் டாடா மோட்டார்ஸ் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அடுத்த 5 இடங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com