கமிஷ்னர் அலுவலகத்தில் நுழைந்த ‘போலி’ போலீஸ் கைது

Fake-Police-arrested-in-Chennai-Commissioner-Office

காவலர் எனக்கூறி போலி அடையாள அட்டையுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

சாம் ஜெபராஜ் என்பவர் சாலை பாதுகாப்புக் காவலர் என்ற அடையாள அட்டையைக் காண்பித்து ஆணையர் அலுவலகத்துக்குள் நுழைந்திருக்கிறார். காவல் ஆணையரை சந்திப்பதற்காக பார்வையாளர் அறையில் சாம் ஜெபராஜ் காத்திருந்தார். அப்போது ஆணையர் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் போக்குவரத்து காவல் அதிகாரியை சந்திக்கும்படி சாம் ஜெபராஜிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம் ஜெபராஜ் அந்த அதிகாரியை சந்தித்த போது, அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் விழாவிற்கு காவல் ஆணையரை அழைத்து வருகிறேன் எனக்கூறி, அதன் முதல்வரையும் சாம் ஜெபராஜ் அழைத்து வந்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. காவல்துறையில் சாலை பாதுகாப்பு என்ற பிரிவு இருக்கிறதா ? என்பது கூடத்தெரியாமல் போலி அடையாள அட்டையுடன் வந்தவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆணையர் அலுவலகத்துக்குள் அனுமதித்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement