அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் சொன்னதை கடைபிடிக்க முடியவில்லை - ரஜினி சூசகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தன்னை அரசியலில் நுழைய வேண்டாம் என அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கியதாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.


Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. அங்கு வெளியிடப்பட்ட ட்ரெய்லர், தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.


Advertisement

இதற்கிடையே ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “60 வயதில் மூன்று விஷயங்களை கடைபிடிக்கும்படி நடிகர் அமிதாப் பச்சன் எனக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அரசியலில் நுழையக் கூடாது என அறிவுரை கூறினார். ஆனால் என்னால் முதல் இரண்டை மட்டுமே கடைபிடிக்க முடிந்தது” என தெரிவித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement