‘வாக்காளர்களுக்கு வெள்ளி விளக்கு, பாத்திரங்கள்’ - கடலூரில் சலசலப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருத்தாசலம் அருகே உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வெள்ளி விளக்குகள், எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ‌


Advertisement

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஊ‌த்தாங்கால் கிராமத்தில் 500 வெள்ளி விளக்குகள், 800 எவர்சில்வர் டப்பாக்க‌ள் போன்றவை முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement

அடுத்ததாக வெள்ளி குத்துவிளக்கு, தங்கக்காசு தரப்போவதாகவும் வேட்பாளர்கள் உறுதி அளித்துள்ளதாகவும், இதுபற்றி வெளிப்படையாக பேசக்கூடாது என்று ஊர்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக வட்டாட்சியர் கவியரசிடம் கேட்டபோது, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படு‌ம் என்று தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement