[X] Close >

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு : மம்தா தலைமையில் பிரமாண்ட பேரணி

Mamata-rally-against-Citizenship-Act

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. 


Advertisement

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, வடமாநிலங்களிலும், மேற்குவங்கத்திலும் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 


Advertisement

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி ரெட் ரோட்டில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலையிலிருந்து தொடங்கி ஜோராசங்கோ தாகுர்பாரியில் நிறைவடையும். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரமாண்டமான முறையில் இந்த பேரணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்துள்ள ராகுல் காந்தி, வன்முறையற்ற அமைதியான வழியில் போராட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close