சுப விழாக்களுக்கு வாடகைக்கு விடப்படும் சென்னை மாநகர பேருந்துகள்...!

Chennai-city-buses-being-rented-for-festivals-----

சென்னை மாநகர எல்லைகளுக்குள் நடைபெறும் வீட்டின் சுபநிகழ்ச்சிகளுக்கு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளுக்கு குடும்பம் குடும்பமாக அனைவரும் பேருந்தை வாடகைக்கு எடுத்துச் செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அண்மை காலமாக சில தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு பேருந்துகள் இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


Advertisement

இந்நிலையில், சென்னை மாநகர எல்லைகளுக்குள் நடைபெறும் வீட்டின் சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர அரசு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திருமண நிகழ்ச்சிகள், சுற்றுலா, விழாக்கள், பள்ளி&கல்லூரிகள், குழு பயணம் என்பன முறையே சென்னை மாநகரத்துக்குள் எங்கு சென்றாலும் அரசு பேருந்து வாடகைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு: 9551582515, 044-23455801

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement