[X] Close >

“குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறுங்கள்” - சென்னையில் வடமாநில மக்கள் போராட்டம்

Citizenship--Amendment--Act--North-eastern-youths-were-protesting-in-Chennai

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Advertisement

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு‌ தெரிவித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில்‌ ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்‌. மேற்குவங்க மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


Advertisement

இந்நிலையில், சென்னையில் வசிக்கும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சென்னை மெரினா கடற்கரை அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த காவல்துறையினர் மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். மேலும் காவல்துறையினர் தங்களது வாகனத்திலேயே அவர்களை அழைத்துச் சென்று வள்ளுவர் கோட்டம் பகுதியில் விட்டனர். 

தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் பகுதியில் அவர் போராட்டத்தை தொடர்ந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழுக்கம் எழுப்பிய வடகிழக்கு மாநிலத்தவர்கள் இந்தச் சட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் வேதனை தெரிவித்தனர். இதனிடையே தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close