4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குளித்தலை அருகே நான்குமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 


Advertisement

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கீழ் நகரத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் (23). இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நான்குமாத கர்ப்பிணியாக இருந்த சிவரஞ்சினி இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Advertisement

இந்நிலையில், மாப்பிள்ளை குடும்பத்தினர் மகள் சிவரஞ்சினியை அடித்து கொன்றுவிட்டதாகவும் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

loading...

Advertisement

Advertisement

Advertisement