சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃபின் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐஐடி விடுதியில் தங்கி, முதுகலை முதலாமாண்டு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப், கடந்த நவம்பர் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்து, மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் மனு அளித்தார்.
இதனிடையே சிபிஐ விசாரணைக் கோரிய மனு மீது, தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என கூறி சென்னை உயர்நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பாத்திமா லத்தீஃபின் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு