டி20 போட்டிகளில் மீண்டும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் பிராவோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பிராவோ கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார். இவர் வெஸ்ட் இஸ்டீஸ் அணியில் 2004ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். அதன் பிறகு 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளையாடினார்.
இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் மற்றும் அணியின் கேப்டன் உள்ளிட்டவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்ட போது பிராவோ தான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது அதனை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக பிராவோ கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “நான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 போட்டிகளில் களமிறங்க உள்ளேன். ஏனென்றால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உள்ளிட்டவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதனால் நான் மீண்டும் அணிக்கு திரும்பவதற்கு இதுவே நல்ல தருணம். என்னால் டி20 போட்டிகளில் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.
நான் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து திரும்பி வரவில்லை. ஏனென்றால் அந்தத் தொடரில் விளையாடுவதற்கு நிறையே திறமையான வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளனர். சரியான திட்டமிடல் இருந்தால் நாங்கள் மீண்டும் உலகிலேயே சிறந்த அணியாக மாற முடியும். என்னுடைய நோக்கம் தற்போது டி20 தரவரிசை பட்டியலில் அணியை முன்னேற்றுவது தான்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!