பைக்கில் புகுந்த நல்ல பாம்பு நீண்ட போராட்டத்திற்கு பின்பு மீட்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு நீண்ட போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.


Advertisement


தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது இருசக்கர வாகனத்தில் நேற்று திடீரென சிறிய பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை அறிந்த சக்திவேல் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  தீயணைப்பு காவலர்கள் விரைந்து வந்தனர். 


சுமார் ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு இருசக்கர வாகனத்திலிருந்து பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர் இரு சக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததை தொடர்ந்து அந்த மீட்பு நிகழ்வை காண பொதுமக்கள் கூடினர் மேலும் அந்த பம்பு மிக சிறியதாக இருந்ததால் அதனை கண்டறிய மிக அதிக நேரம் எடுத்ததாக கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement