“நீ இல்லாத வாழ்வை நினைக்கவே முடியாது” - ரோகித்தின் திருமண நாள் உருக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருமண நாளன்று தனது மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரோகித் ஷர்மா, ‘நீ இல்லா வாழ்வை நினைக்க முடியாது’ என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.


Advertisement

இந்திய அணியின் துணைக் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் ஷர்மாவிற்கு இன்று திருமணம் நாளாகும். ரோகித் கடந்த 2015ஆம் ஆண்டு ரிதிகாவை திருமணம் செய்தார். இன்று 4வது திருமண நாளை இருவரும் கொண்டாடினர். இவர்களுக்கு சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது.


Advertisement

இந்நிலையில், திருமண நாளுக்கு தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அன்புடன் உருக்கமாக, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரோகித் பதிவிட்டுள்ளார். அதில், “நீ இல்லா வாழ்க்கை எப்படி நகரும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதைவிட சிறந்த ஒன்றை கொடுக்கமுடியாது. ஐ லவ் யூ ரித்திகா” என தெரிவித்துள்ளார். அத்துடன் தங்கள் திருமண புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement