50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு படங்களும் 50 நாள்களை நிறைவு செய்துள்ளன. 


Advertisement

இந்தத் தீபாவளி பண்டிகை அன்று விஜயின் ‘பிகில்’ திரைப்படம் மற்றும் கார்த்தியின் ‘கைதி’திரைப்படமும் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற்றன. கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி திரைக்கு வந்தது முதல் இந்த இரண்டு பெரிய படங்களும் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளன. 


Advertisement

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார். மேலும் இந்தப் படம் பெண்களின் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். விஜயின் இளவயது தோற்றமான மைக்கேல் கதாபாத்திரம் ஒரு கால்பந்து வீரராகவும் அதன் பின்னர் பயிற்சியாளராகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் வயதான தோற்றத்தில் நடித்திருந்த விஜய் பாத்திரத்திற்கு ராயப்பன் எனப் பெயரிப்பட்டிருந்தது. 

இப்படத்தின் 50வது நாள் வெற்றியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவரது பதிவில், “பிகில் பாக்ஸ் ஆபிஸில் 50 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. உலகெங்கிலும் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக இது திகழ்கிறது. படத்தை நேசித்தவர்களுக்கும் அருகிலுள்ள திரையரங்குகளில் பார்த்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
விவேகானந்த பிலிம்ஸுடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பின் கீழ் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’யில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, தீனா, வாட்சன் சக்ரவர்த்தி, யோகி பாபு, மகாநதி சங்கர் மற்றும் பொன்னவன்னன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இதில் கார்த்தி கைதியாக நடித்தார். இதன் 50 நாள் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement