"வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நன்றி"- ரஜினிகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Image

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். இதனிடையே ரஜினிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டைல் மற்றும் பணிவால் ஒவ்வொரு தர்பாரிலும் தலைவராக திகழ்வீர்கள் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். 


Advertisement

Image result for rajinikanth

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகை தந்த ரசிகர்களுக்கு லதா ரஜினிகாந்த் இனிப்புகளை வழங்கினார். இந்நிலையில், ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிய, தன்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நன்றி என குறி‌ப்பிட்டுள்ளார். இதே போல் வாழ்த்து தெரிவித்த தமிழ் மக்கள், திரையுலக நண்பர்கள், அரசியல் உள்ளிட்ட பல துறை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ரஜினி கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement