திருப்பூரில் பார் உரிமையாளரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய ஐந்து பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் தனபால். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான தேவகோட்டை சென்று விட்டு திரும்பும் போது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைக் கடத்தினர். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அத்துடன் அரிவாளால் அவரது விரலை வெட்டிக் கொலை செய்யவும் முயன்றுள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பி வந்த தனபால், அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வாகன தணிக்கையின் போது சந்தேகப்படும் வகையில் வந்த அழகுபாண்டி, ரோஜா, முத்து, தீர்த்தகுமார், ஈஸ்வரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!