விழுப்புரம் சுதாகர் நகர் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்மணி கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது கணவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8-ஆம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சுதாகர் நகரிலுள்ள வீட்டில் இருந்து இந்திரா என்ற பெண்மணி எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்திராவின் கணவர் நடராஜன் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். நடராஜனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி இந்திரா விழுப்புரத்தில் வசித்து வந்துள்ளார். இரண்டாவது மனைவி திருக்கோவிலூரில் வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திராவிற்கும் நடராஜனுக்கும் பிறந்த மகன் கோவையில் கல்லூரியில் படிக்கும்போது தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விட்டார். ஆகவே கணவரும் மனைவியும் விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியிலுள்ள சொந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நடராஜன் திருக்கோவிலூரிலுள்ள தனது இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்திரா ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்ததாக போலீசாருக்கு நடராஜன் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கணவர் நடராஜனிடமும் விசாரணை செய்துள்ளனர். அப்போது நடராஜன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
போலீசார் தொடர்ந்து அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோது நடராஜன், சில உண்மைகளை தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். அவர் தனது மனைவியை கொலை செய்விட்டு வேறு யாரோ செய்ததைபோல் நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. ஆகவே நடராஜனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கணவனே மனைவியை கொலை செய்து நாடகமாடியது அப்பகுதி மக்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!