[X] Close >

இருசக்‌கர‌ வாகனங்கள் மீது கார் மோதி விபத்து: வீடியோ

Speeding-car-In-Wrong-Way--Hits-Two-Wheeler-In-krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம்‌ ஓசூர் அருகே சாலையில் இருசக்‌கர‌ வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த கார் திடீரென வலது புறமாக சென்று எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கரவாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கரவாகனங்களில் சென்ற 3 பேர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.


Advertisement

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. இந்த விபத்து குறித்து தேன்கனிகோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

ஒகேனக்கல் பகுதியிலிருந்து காரில் குடிபோதையில் வந்த நபர்கள்தான் விபத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close