குடியுரிமை மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில் அடுத்து மாநிலங்களவையின் ஒப்புதல் பெற அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் குடியுரிமை மசோதா குறித்து எவ்விதத்திலும் அஞ்சத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
இந்திய முஸ்லிம்கள் தொடர்ந்து இந்திய குடிமகன்களாகவே நீடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இம்மசோதா குறித்து முஸ்லிகள் மத்தியில் தேவையற்ற அச்ச உணர்வுகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அமித் ஷா குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு நம் நாட்டு குடியுரிமை தருவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்றும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள சிறுபான்மையின மக்களுக்கு நம் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை உறுதிப்படுத்தவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'